Posts

தீபாவளி - சிறுகதை

மணி ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது. கும்மிருட்டு. மென்மையாக வானம் தூரலிட்டுக் கொண்டிருந்தது. நடுங்க வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல், தெருக்கோடியில் மங்கலாய் எரிந்துகொண்டிருந்த தெருவிளக்கின் ஒளியில் அப்பாவின் வரவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தேன். “டேய் உள்ள வாடா..மழ வருது.. கரண்ட் போறதுக்குள்ள சாப்புடு வா” உள்ளேயிருந்து அம்மா அழைத்தாள்.  “பசிக்கலமா,,அப்பா வரட்டும்” உரக்கக் கத்திவிட்டு மீண்டும் வழி மீது விழியை வைத்தேன். “என்னடா என்னைக்கும் இல்லாத அதிசயமா அப்பா வரட்டுங்குற..”என்று அம்மா முனகியது காதில் விழுந்தது. ஒன்பது ஐந்துக்கு வரும் மினி பஸ்ஸில் தான் அப்பா வருவார். பக்கத்து டவுனில் ஒரு மில்லில் வாட்ச்மேன் வேலை. நாளைக்கு தீபாவளி என்பதால் இன்னைக்கு ராத்திரி ஷிப்ட் இல்லை. வாயில்படிக்கும் நடைக்கதவுக்குமாக நடை போட்டுக் கொண்டிருந்த போது, அன்றைக்கு மதியம் நடந்தது மீண்டும் நினைவுக்கு வந்தது. “ஜீன்ஸ்பேன்ட் ஒன்னு, சாதா பேன்ட் ஒன்னு.அப்புறம் இந்த சட்டை. மொத்தம் ஆயிரம் ரூவாய்க்கு மேல டா” என்று சொல்லியவாறே அவற்றை, “நியூ இந்தியா சில்க்ஸ்” என்று எழுதியிருந்த துணிக்கடைக் கவரிலிருந்து வ...